ரஷ்யா மீது ஒரே நேரத்தில் 1,000 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ள உக்ரைன்; ஒருவர் பலி; 05 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


ரஷியா மீது இன்று, ஒரே நேரத்தில் 1,000 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் - அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு,05 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷியாவின் எரிவாயு நிலைகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இன்று இந்த ஏவுகணை தாக்குதலை உக்ரைன் நடத்தியுள்ளது.

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்துள்ளது. அத்துடன், மற்றொரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவின் 15 பிராந்தியங்களில் உக்ரைனால் ஏவப்பட்ட 1,015 டிரோன்களை தாக்கி அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் பலியானதாகவும், 06 வயது சிறுமி உள்பட இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து, கல்வி நிறுவனம் ஒன்று சேதமடைந்து, பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine has launched an attack on Russia using 1000 drones simultaneously


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->