தீபாவளியை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரி தெற்கு ரயில்வேக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்..! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குத் திரும்பும் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பண்டிகைக் காலங்களில் கடும் நெரிசலையும் பயணச் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை / தாம்பரத்திலிருந்து ராமேசுவரத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். தாம்பரம் – மானாமதுரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 06159/06160 எண் கொண்ட முன்பதிவில்லா சிறப்பு ரயிலை, செயல்பாட்டு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.

மேலும், சென்னை – ராமேசுவரம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில், குறிப்பாக தீபாவளி மற்றும் இதர பண்டிகைக் காலங்களில், முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பயணிகளின் கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு, அதிக நெரிசல் ஏற்படும் நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MP Navaskani writes a letter requesting the operation of special trains to Rameswaram for Deepavali


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->