ஈரானுக்கு 50 ஆண்டுகள் பொருளாதார தடை - உக்ரைன் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
Ukraine economic sanction on Iran for 50 years
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில் ரஷ்யாவிற்கு உதவியாக ஈரான் சக்தி வாய்ந்த ஷாஹெட்சஸ்-136 டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த ட்ரோன்கள் உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஷ்ய படையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ஈரானின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உக்ரைன் அரசு ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி, ஈரானுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரானின் பல்வேறு துறை சார்ந்த வணிகங்களுக்கு பொருளாதார தடை விதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உக்ரைன் வழியாக ஈரானிய பொருட்களை கொண்டு செல்வதையும், உக்ரைனின் வான்வெளியை பயன்படுத்துவதற்கும், சொத்துரிமைகளை மாற்றுவதற்கும் தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த மார்ச் மாதம் ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு சொந்தமான 141 சட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே 10 ஆண்டுகள் உக்ரைன் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ukraine economic sanction on Iran for 50 years