கிழக்குப் பகுதியில் முக்கிய நகரங்களை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றிய உக்ரைன் படைகள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 6 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடையும் போரில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் உக்ரைனின் முக்கிய நகரமான கார்கீவ் பகுதியில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உக்ரைன் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதலால், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், இஸியம், பலாக்லியா மற்றும் குபியன்ஸ்க் நகரங்கள் ரஷ்யா கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்து ரஷ்யப்படைகள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் உக்ரைன் படைகளின் புதுப்பிக்கப்பட்ட பதிலடியை தொடங்கியதிலிருந்து 2 ஆயிரம் ச.கி.மீ. பகுதியை உக்ரைன் மீட்டுள்ளது எனவும், ரஷ்ய படைகள் இஸியம் நகரில் இருந்து வெளியேறியதை அந்நாடே ஒப்புக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது எனவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine captures important cities in western ukraine


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->