ஈரானில் இரண்டு போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை.! - Seithipunal
Seithipunal


மேற்காசிய நாடான ஈரானில், குர்து இனத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட பின் போலீஸ் காவலில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் மற்றும் பலூச்சி பகுதி மக்கள் அவ்வப்போது காவல்துறையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஈரானின் எல்லையில் உள்ள சிஸ்தான்-பலூசிஸ்தான் பகுதியில், மசூதிகளில் தொழுகையில் ஈடுபடுபவருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆயுதமேந்திய குழுக்கள் பதுங்கியிருந்து காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 2 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் போராட்டக்காரர்களா அல்லது போதைப் பொருள் கடத்துபவர்களாக என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two policemen shot dead in Iran


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->