இரண்டு நாட்கள் பொது விடுமுறை - எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்கள் பொது விடுமுறை - எங்குத் தெரியுமா?

மேற்கு ஆசிய நாடான ஈரானில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் கொளுத்தி வருகிறது. ஏற்கனவே பல நகரங்கள் வெப்பத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஈரான் அரசு செய்தித் தொடர்பாளர் அலி பஹடோரி- ஜஹ்ரோமி தெரிவித்ததாவது, "நாட்டில் வெப்பம் அதிகமாக இருப்பதால், புதன் மற்றும் வியாழன் அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்களாக இருக்கும். 

அதே சமயம் மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார். நாளை தெஹ்ரானில் வெப்பநிலை 39 செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two days holiday in iran for heavy heat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->