பெங்களூருவில் கொந்தளிப்பு...! இரவு சாலையில் இளம்பெண்ணை துரத்திய 3 இளைஞர்கள்…! - வைரலான வீடியோ - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சாலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண்ணை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் தொடர்ந்து துரத்தி பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பெங்களூரு மக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.இரவு சுமார் 10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம், பின்னால் சென்ற ஒரு காரில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த காட்சிகளில், விதிகளை மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வதும், யாரும் ஹெல்மெட் அணியாததும் தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர், இந்த வீடியோவை ஆதாரமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் இளம்பெண்ணை இளைஞர்கள் தொடர்ந்து துரத்திச் சென்றதாகவும், சம்பவத்தை பதிவு செய்த பின்னர் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோதும், அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் பெங்களூரு காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கி, சம்பந்தப்பட்ட இளைஞர்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தினர்.

அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூரு போலீசார் உறுதியளித்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Turmoil Bengaluru Three young men chased young woman street night video went viral


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->