5-ந்தேதி இறுதி கெடு விதித்த டிரம்ப்..ஹமாஸ் அமைப்புக்கு தலைவலி ஆரம்பம்! - Seithipunal
Seithipunal


காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக  ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்துள்ளார்  டிரம்ப்,இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.


 ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில்,  66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. 

இதையடுத்து காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்புக்கு  8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன.

இந்நிலையில், டிரம்ப் கடந்த செவ்வாய் கிழமை கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் என்றார். 

 இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், டிரம்ப் நேற்று  வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை  மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும்.

ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என அவருடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump who dealt the final blow on the 5th A headache begins for the Hamas organization


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->