அவதூறு செய்தி வெளியிட்ட பிபிசி: 44 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரும் டிரம்ப்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டிரம்ப், பிபிசி செய்தி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார். குறித்த நிறுவனம் மன்னிப்பு கேட்ட போதிலும் 05 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக அறிவித்தார்.

டிரம்ப் தொடர்பான ஒரு ஆவண படத்தை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பி.பி.சி., திருத்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அத்துடன், இந்த நிறுவனம் தரப்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. ஆனாலும் பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ''நாங்கள் அவர்கள் (பிபிசி செய்தி நிறுவனம்) மீது வழக்குத் தொடுப்போம். அடுத்த வாரத்தில் 05 பில்லியன் டாலர்கள் வரை (இந்திய மதிப்பில், 44 ஆயிரம் கோடி ரூபாய்) வரை நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் மீது வழக்கு தொடர் இருக்கிறேன். நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.

அவர்கள் ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் ஏமாற்றினர். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை அவர்கள் மாற்றினர். இது மிகவும் மோசமானது. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், மற்றவர்களுக்கு இது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியாது.'' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump to sue BBC for defamatory news seeking Rs 44000 crore in damages


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->