ஆசியான் உச்சி மாநாடு: கோலாலம்பூரில் ட்ரம்ப் குதூகல நடனம்..!
Trump dances in Kuala Lumpur
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ள நேரத்தில் வரவேற்பு குழுவினருடன் இணைந்து நடனமாடி உற்சாகமடைந்துள்ளார்.
மலேஷியாவில் ஆசியான் உச்சிமாநாடு இன்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றுள்ளார். பிரதமர் நரேந்திரை மோடி வீடியோ கான்பரசிங் மூலம் பங்கேற்றார்.
குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற அதிபர் டிரம்பை மலேஷிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் திரண்டு நின்று வரவேற்றுள்ளார்.
அவருக்கு பாரம்பரிய நடனத்துடன் அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ட்ரம்ப் நடனக்குழுவினருடன் சேர்ந்து கைகளை அசைத்து நடனம் ஆடி உற்சாகமடைந்தார். உடனே மலேஷிய பிரதமர் அன்வார் இப்ராஹிமும் கைகளை தட்டி டிரம்புக்கு உற்சாக மூட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Trump dances in Kuala Lumpur