கண்டெய்னர் லாரியில் சிக்கிய 570 கோடி பணம் - தெலுங்கானாவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அந்த வகையில் கட்வால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், கட்டுக் கட்டாக மொத்தம் 750 கோடி ரூபாய் பணம் இருந்தது. 

இதைப்பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள் பணம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், அந்தப் பணம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக்குச் சொந்தமானது என்பதும், கேரளாவிலிருந்து ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. 

அதற்கான அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்ததால் அந்த லாரியை தொடர்ந்து பயணிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதற்கு முன்னதாக தமிழகத்தில் கடந்த 2016- ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கோவை - திருப்பூர் புறநகர் சாலையில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் இருந்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

truck stuck with 570 crores money in telangana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->