ஈரானில் மீண்டும் நடுக்கம்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்...! - மக்கள் அதிர்ச்சி!
Tremors again Iran 4point1 magnitude earthquake near Strait Hormuz People shocked
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக நகருக்கு அருகே ரிக்டர் அளவில் 4.1 பதிவான நிலநடுக்கம் அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை 3.17 மணியளவில் பந்தர் அப்பாஸ் நகரின் மேற்கு திசையில் சுமார் 74 கிலோமீட்டர் தொலைவில், நிலப்பரப்பிற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையப்புள்ளியாகக் கொண்டு இந்த நில அதிர்வு உருவானது.

இதன் தாக்கம் பந்தர் அப்பாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நடுக்கமாக உணரப்பட்டதோடு, உலகளாவிய கடல்சார் வணிகத்தின் முக்கிய நுழைவாயிலான ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியிலும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கம் 4.1 என்ற மிதமான அளவிலேயே பதிவானதால், அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதங்களோ அல்லது கட்டிடங்கள் சிதைவோ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இதே வாரத் தொடக்கத்தில், ஈரானின் பார்ஸ் மாகாணத்திலுள்ள கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் நிலைகுலையச் செய்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைச் சீற்றம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
English Summary
Tremors again Iran 4point1 magnitude earthquake near Strait Hormuz People shocked