#BREAKING : துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடுப்பாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 34,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஓய்வதற்குள் மீண்டும் இன்று நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் துருக்கியின் கராமன்மராஸ் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today turkey earthquake 4.7 rictor measurement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->