முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கருதப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். எட்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. மேலும், பல்வேறு முதலீட்டாளர்களையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn cm stalin joined Investors Conference meeting in spain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->