ஜப்பானில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு நேரக் கட்டுப்பாடு: டோயோக்கே நகர மேயர் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட ஸ்மார்ட்போன்கள், மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத சாதனமாக உள்ளன. ஆனால் அவற்றை அதிகப்படியாக பயன்படுத்துவதால் உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, தேவையற்ற சர்ச்சைகளிலும் பலர் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் நிறைந்த பாரம்பரிய நகரமான டோயோக்கேவில், பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் மேயர் வெளியிட்ட உத்தரவு படி, ஒரு நாளில் அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

மேலும், ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தால் சமூகத்தில் ஏற்படும் தீமைகள், குறிப்பாக பாலியல் குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பதையும் நகராட்சி காரணமாகக் குறிப்பிட்டுள்ளது. குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தொடர்பு தேவைகளுக்காக தொலைபேசி மற்றும் பிற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Time restrictions on smartphone use in Japan Toyooka city mayor orders action


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->