அமெரிக்காவில் 'டிக் டாக்' செயலிக்கு தடை; உச்ச நீதிமன்றம் உறுதி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் 'டிக் டாக்' செயலிக்கு விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ;டிக் டாக்' தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..

'டிக் டாக்' எனப்படும்,மொபைல்போன் செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். 

இந்த செயலியை சீனாவைச் சேர்ந்த ' பைட்டான்ஸ்' என்ற நிறுவனம்  நிர்வகித்து வருகிறது. அதே நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த 'டிக் டாக்' செயலிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த 'டிக் டாக்' செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடையானது  இந்த வார இறுதியில் அமலுக்கு வரவுள்ளது.

இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 'டிக் டாக்' வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது. இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு தடை ஏற்பட்டு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tik Tok app banned in the US


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->