2027-ஆம் ஆண்டில் உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம்; இங்கிலாந்து வானிலை மையம் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம், நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம், பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோவின் தாக்கம் தொடங்கியது. இது இந்த ஆண்டின் பிற்பகுதி அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,  எல் நினோவின் தாக்கம், நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வழக்கமாக, எல் நினோவினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரும் சூழலில், வரும் மாதங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வறட்சி, அதிக வெப்பநிலை, தீவிர மழைப்பொழிவு மற்றும் பிற கடுமையான வானிலை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், தென் அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் போன்ற பகுதிகளில் மிகக் கடுமையான வறட்சி நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வரும், 2027-ஆம் ஆண்டை உலக அளவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டாக மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The UK Met Office has warned that 2027 will be the warmest year on record globally


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->