பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஒலிம்பிக் வீராங்கனையை கொன்ற காதலன் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜியை எரித்துக் கொலை செய்த முன்னாள் காதலனும் தற்போது உயிரிழந்தார்.

உகாண்டாவை சேர்ந்த தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி. இவர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ரெபேக்கா செப்டேஜி 44வது இடத்தை பிடித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற ரபாகா கடந்த மாத இறுதியில் சொந்த ஊர் திரும்பினார்.

இதனிடையே,கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெபேக்கா செப்டேஜிக்கும் அவரது காதலனான டிக்சன் என்டிமா என்பவருக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்தது. இந்த கருத்து வேறுபாட்டின்போது ரெபேக்கா மீது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் தீக்காயமடைந்த ரெபேக்கா செப்டேஜி கென்யாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காதலனுக்கும்  தீக்காயங்கள் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

இதையடுத்து, இருவருக்கும் தீவிர சிகிச்சை மேற்கொண்ட  நிலையில் வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி கடந்த 4ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தீக்காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வந்த காதலனான டிக்சன் என்டிமா நேற்று அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரெபேக்கா செப்டேஜி மீது காதலன் தீ வைத்து கொன்ற நிலையில், காதலனும் தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The lover who killed the Olympic athlete by pouring petrol and setting her on fire has died


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->