எப்ஸ்டீன் கோப்புகள்; அரை நிர்வாண புகைப்படத்தில் சிக்கிய பீட்டர் மண்டேல்சன்; மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் பற்றிய எப்ஸ்டீன் கோப்புகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அமெரிக்க நீதித்துறையில் எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜனவரி 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

அத்துடன், முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆவணங்களில் அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றது. இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் பீட்டர் மண்டேல்சனை தூதர் பதவியிலிருந்து, பிரதமர் ஸ்டார்மர் நீக்கினார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் பீட்டர் மண்டேல்சன் தொடர்புடைய புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஆவர் ஒரு பெண்ணுடன் அரை நிர்வாணமாக இருக்கிறார். இதன்மூலம் எப்ஸ்டீனுடன் பீட்டர் மண்டேல்சன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தமை உறுதியாகியுள்ளது. 

இதனால் பீட்டர் மண்டேல்சனுக்கு பதவி வழங்கிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதாவது, புதியதாக எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்டார்மரின் அரசு கடும் அழுத்ததில் உள்ளது.

இந்நிலையில் பீட்டர் மண்டேல்சனின் பொய்களை நம்பி அவருக்கு பதவி வழங்கியதாகவும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் இன்று பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The British Prime Minister apologized for appointing Peter Mandelson to a position


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->