டெஸ்டாவின் புதிய முயற்சி.. தலைமை ஏற்கும் தமிழர் அசோக் எல்லுசாமி..! - Seithipunal
Seithipunal


டெஸ்லாவின்  ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்க்ப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் புகழ் பெற்ற கார் நிறுவங்களில் ஒன்று டெஸ்லா.  தற்போது டெஸ்லா குழுமம் தானா இயங்கும் மின்சார கார் ஒன்றை உற்பத்தி செய்ய உள்ளது. அந்த குழுவின் முதல் ஊழியராக தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்படுவதாக் டெஸ்லா தெரிவித்துள்ளது.

இது குறித்து டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க் இது குறித்து தனது டிவிட்டர் திவில் தெரிவித்துள்ளார். அதில், டெஸ்லாவின் மின்சார வாகன 'ஆட்டோ பைலட்' குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசாமி பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

தானாகவே இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் தலைமை தாங்கி குழுவை வழி நடத்திச் செல்வார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த அசோக் எல்லூசாமி முன்னதாக ஃபோக்ஸ்வேகன் ஆய்வுகூடத்தில் பணியாற்றியது குறிப்பிடதகக்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil leadership for Tesla's automated car system


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal