ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள சிறுபான்மையின மக்கள் மீண்டும் திரும்ப வேண்டும் - தாலிபான்கள் வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள சிறுபான்மையின மக்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று தாலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்த பின்பு தனது கடுமையான ஷிரியா சட்டத்தை கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 18 அன்று ஐ.எஸ்.கே.பி பயங்கரவாத குழு காபுலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு சீக்கியர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்மட்ட குழுவினர் குருத்வாராவுக்கு சென்று அங்கு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் ஆப்கான் அரசு 7.5 மில்லியன் தொகையை குருத்வாரா சீரமைப்புக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து  சீக்கிய குருத்வாரா மறுசீரமைப்பு செய்ய தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டதாகவும், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள சிறுபான்மையின மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்றும், இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் சமரசம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Taliban pleads Hindus and Sikhs back to Afghanistan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->