இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.! அதிபர் புதின்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் சீனாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்தே ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்து வந்துள்ளது.

இந்நிலையில் உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யா பொருளாதார தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முற்றிலுமாகத் தடைப்பட்டது.

இதையடுத்து ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணையை நட்பு மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் 14வது பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி  பேசிய ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் குழும நாடுகளுக்கிடையே வர்த்தகம் மூன்று மாதங்களில் 38 மில்லியனில் இருந்து 45 மில்லியன் டாலராக உயர்ந்த இலக்கை எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surge in crude oil exports despite war says putin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->