ஸ்பேஸ்எக்ஸ் இன் முயற்சி தோல்வி: ஸ்டார்ஷிப் விண்கலம் ஏவிய 30 நிமிடங்களில் வெடித்து சிதறல்; வீடியோ உள்ளே..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் இன்று காலை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களில் அந்த விண்கலம் இலக்கை எட்டுவதற்கு பதிலாக வெடித்து சிதறியது.

செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, எலான் மஸ்க், அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற  வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார்.

அதன்படி, இன்று விண்ணில் ஏவப்பட்ட  ஸ்டார்ஷிப் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து, மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்துள்ளது. அத்துடன், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, குறித்த விண்கலம் வெடித்து சிதறி இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது.

இது குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- 403 அடி (123 மீட்டர்) உயரம் கொண்ட அந்த விண்கலம், கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு, கடந்த 02 முறை தோல்வியடைந்த புள்ளியை கடந்து சென்றது. எனினும், அது வெடித்து சிதறியுள்ளது.

இதுபோன்ற பரிசோதனையில், நாம் என்ன கற்று கொள்கிறோம் என்பதிலேயே வெற்றி வருகிறது. இன்றைய பரிசோதனையானது, ஸ்டார்ஷிப்பின் நம்பக தன்மையை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு எட்டு முறை விண்கல ஏவுதல் முயற்சி நடந்துள்ளது. அதில் 04 வெற்றிகள் கிடைத்துள்ளன. 04 முறை தோல்வியடைந்து விண்கலம் வெடித்து சிதறியுள்ளன. இந்நிலையில், இன்றைய முயற்சியில் புறப்பட்ட 30-வது நிமிடத்தில், நடுவானில் பறந்து செல்லும்போது, கதவுகள் திறப்பதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெறித்து சிதறியதாக கூறப்படுகிறது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Starship spacecraft explodes 30 minutes after launch


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->