பாகிஸ்தானுடன் போர் பயிற்சி ஈடுபட உள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கை கடற்படை மறுப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் நாளை இலங்கை வரும் நிலையில் 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது.

இதனால் இந்தியா மற்றும் இலங்கை இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் போர்க்கப்பலுக்கு வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் அனுமதி மறுத்ததால், கொழும்புத் துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையும், இலங்கை கடற்படையும், கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இலங்கை கடற்படை இது தவறான தகவல் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Srilanka refused that war drill with pakistan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->