அடித்து கொன்று உடலுக்கு தீ வைப்பு... இலங்கை நபருக்கு பாகிஸ்தானில் நடந்த கோர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


இலங்கையை சேர்ந்தவர் பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஆடை  தொழிற்சாலையில் பொதுமேலாளராக பணியாற்றி வருபவர் பிரியந்த தியவதன குமார . இவரின் தொழிற்சாலையில்  மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் கட்சியின் சுவரோட்டி ஒன்றை அவர் கிழித்தெறிந்தார்.

அதில் புனித நூலான குரானின் வாசகங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.  அதனை பிரியந்த தியவதன குமார  கிழித்த செய்த பரவவே அவர் தொழிற்சாலை முன் குவிந்த அந்த கட்சியினர் அவரை தொழிற்சாலையில் இருந்து இழுத்து வந்து அவரை அடித்து கொலை செய்து அவர் உடலை தீவைத்து கொளுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் பாகிஸ்தானி அதிபரை செல்போனில் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய இம்ரான் கான் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka condemn for its citizen killed in pakistan


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal