வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை... இலங்கை ராணுவம் திட்டவட்டம்...!!
Sri lankan army explained velupillai prabhakaran was dead
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரவையின் நிறுவனரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் கூட்டமைப்பின் தலைவருமான பழ.நெடுமாறன் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கிறார். உரிய நேரத்தில் வெளிப்படுவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை என்னால் சொல்ல முடியாது. பிரபாகரன் குடும்ப உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

அவர்கள் மூலம் அறிந்த செய்தியை நான் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன்’’என செய்தியாளர்கள் சந்திப்பில் பழ.நெடுமாறன் அறிவித்து இருந்தார். இந்த விவகாரம் உலக அளவில் பிரபாகரன் உயிரோடு இருப்பது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் "விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை. கடந்த 2009 மே 18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இறுதிக்கட்ட போரில் கொன்றதற்கான ஆதாரங்கள் எங்கள் வசம் உள்ளது. அவர் இருந்த பிறகு மரபணு சோதனை நடத்தி நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது" என இலங்கை ராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்
English Summary
Sri lankan army explained velupillai prabhakaran was dead