"ஸ்புட்னிக் வி" கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கொலை!! - Seithipunal
Seithipunal


ரஷ்ய நாட்டின் "ஸ்புட்னிக் வி" கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர் விஞ்ஞானி ஆன்ட்ரி போடிகோ பெல்டால் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்ய நாட்டின் கொரோனா பரவல் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வி கடந்த 2020ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த 18 விஞ்ஞானிகளில் 47 வயதான வைராலஜிஸ்ட்டான ஆன்ட்ரி போடிகோவும் ஒருவர் ஆவார்.

அவருக்கு கடந்த 2021ம் ஆண்டு ரஷ்ய அதிபர் புதின் ரஸ்யாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான "Order of Merit for the Fatherland" விருது அளித்து கவுரவித்திருந்தார். மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த அவர் கடந்த வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ரஷ்ய போலீசார் மேற்கொண்டு விசாரணையில் அவர் இருதரப்பு இடையே ஏற்பட்ட தகராறில் பெல்டால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் 29 வயது இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sputnik V Corona vaccine scientist in Russia was killed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->