6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு உள்ளிட்டவற்றை தவிர்க்க பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படுகிறது.

முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 18-ந்தேதி வரை பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான கேபினட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

அதன் படி, வெறுப்பு பேச்சு, வன்முறை உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. இதேபோல், கடந்த ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து ராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six days social medias ban in pakisthan


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->