ஈரானை புரட்டி போட்ட மழை - 7 பேர் பலி.! 
                                    
                                    
                                   seven peoples died floods in iran
 
                                 
                               
                                
                                      
                                            ஈரான் நாட்டில் கடந்த சில தினமாகவே மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கொரசன் ரசவி மாகாணம் மசாத் நகரில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி தத்தளித்தன. 

மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை அடியோடு பிடுங்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. 250 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 
இந்த மழையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி உயிரிழந்த 2 பேர் உள்பட இதுவரைக்கும் 7 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டின் பேரிடர் மீட்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       seven peoples died floods in iran