ஏவுகணை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புங்கள்.! உக்ரைன் அதிபரின் மனைவி வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புங்கள் என்று அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபரின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா அங்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார்.

அப்போது எதிரிகளை எதிர்த்து போராடவும், உக்ரைன் மக்களை பாதுகாக்கவும், அமெரிக்கா எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளது. இந்த போராட்டத்தில் அமெரிக்கா எங்களுடன் நிற்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புங்கள் என்று அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளார் .

இந்த கோரிக்கையை போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை, கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Send airline defence for tackling Russia missile attacks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->