ரஷ்ய ஒற்றுமை தினம் - இந்தியாவுக்கு புகழாரம் சூடிய ரஷ்ய அதிபர்.! - Seithipunal
Seithipunal


ரஷியா உக்ரைனுக்கு இடையே கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக போர் நடைப்பெற்று வரும் நிலையில், ஆண்டுதோறும் நவம்பர் 4-ந்தேதி ரஷியாவின் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்த தினத்தை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய நாட்டை பாருங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒரு திறமையான, மிகவும் கடுமையாக உழைக்க கூடிய மக்களை கொண்டுள்ளது. வளர்ச்சி என்ற ஒன்று வரும்போது, இந்தியா நிச்சயம் சிறந்த சாதனைகளை படைக்கும். 

அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்தியாவில் ஏறக்குறைய 150 கோடி மக்கள் உள்ளனர். அதுவே அவர்களுக்கான ஒரு ஆற்றலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஆப்பிரிக்கா நாட்டின் காலனி ஆதிக்க நடைமுறைகளை பற்றியும் குறிப்பிட்டார்.  

மேலும், ஆப்பிரிக்கா நாட்டை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்து, சூறையாடி சென்றன. அது அனைவருக்கும் தெரிந்த ஒரு வெளிப்படையான உண்மை. அங்கு கொள்ளையடித்தல், அடிமை வர்த்தகம் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆப்பிரிக்க மக்களுக்கு பாதிப்பையும், துயரத்தையும் ஏற்படுத்தியே இன்று ஐரோப்பா கட்டப்பட்டுள்ளது. இதை ஐரோப்பியா நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மறைக்கவில்லை" என்று அவர் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian Unity Day function president viladimir puthin speach


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->