'சீனாவின் அமைதி திட்டம்'... போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் - அதிபர் புதின் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா சபை மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன . மேலும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன் சீனா 12 அம்ச அமைதி திட்டத்தை வெளியிட்டு அதை பின்பற்றுமாறு சீனா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜின்பிங், நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையான உறவை மேம்படுத்துவது மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் சீனா அமைதி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இரு நாட்டின் தலைவர்களும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, சீனா அமைதி திட்டத்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பட்சத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று புதின் தெரிவித்துள்ளனர்.

மேலும் உக்ரைனுக்கு இங்கிலாந்து அணு ஆயுதங்களை அனுப்பினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian President Putin says china peace policy can end Ukraine war


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->