போருக்கு இடையே கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் ஈட்டும் ரஷ்யா.! விலையை குறைக்குமா சவுதி அரேபியா.? - Seithipunal
Seithipunal


போருக்கிடையே ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் ஈட்டி வருவதால், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் பொருளாதார தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை விதித்திருந்தது.

இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார கடை காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.

மேலும் ரஷ்யா, இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்ற நிலையை எட்டியுள்ளது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்ததால் அதன் வருமானம் மட்டும் 100 நாட்களில் 98 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது .

அதே நேரத்தில் ஓபேக் எனப்படும் வளைகுடா பகுதியை சேர்ந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வருமானம் குறைந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் கச்சா எண்ணெய் விலையை குறைத்ததை போன்று சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளும் விரைவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia profited from crude oil between the wars


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->