மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் ரசம்.! - Seithipunal
Seithipunal


பெரியவர்களுக்கு மூட்டு வலி ஒரு பெரும் வியாதியாக உள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களை அணுகியும் பலன் கிடைக்கவில்லை. அப்படி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை ரசம் வைத்து சாப்பிட்டால் போதுமானது. அதனை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

முடக்கத்தான் கீரை
மல்லிவிதைகள்
சீரகம் 
மிளகு 
மஞ்சள் தூள்
பூண்டு 
தக்காளி
புளி 
உப்பு 
எண்ணெய்
கடுகு 
உளுந்து 
வரமிளகாய் 
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்

செய்முறை:-

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முடக்கத்தான் கீரையை வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிட வேண்டும். இதையடுத்து ஒரு உரலில் வரமல்லி, சீரகம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.

இதேபோல், தக்காளியையும் கைகளால் கரைத்தோ அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்தோ வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பூண்டையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இவையனைத்தையும் கொதிக்கும் இலைகளுடன் சேர்த்து புளிக்கரைசல் சேர்த்து அடுப்பை குறைத்துவிட வேண்டும்.

இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, உடைத்த வரமிளகாய் மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தலைப்பை ரசத்துடன் கலக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make mudakaththan rasam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->