நடிகர் சங்கத்திற்காக நிதிஉதவி வழங்கிய நடிகர் நெப்போலியன்! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal



நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக நடிகர் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நடிகர்கள், நடிகைகள் என பலரும் நிதி வழங்கினார். 

அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினரும் 2000-2006ம் ஆண்டு காலத்தில் சங்கத்தின் உப தலைவராக பொறுப்பேற்று செயலாற்றிய நெப்போலியன் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். 

இதற்கு முன்னதாக நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடத்திற்காக ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கியதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Napoleon donated funds actor union


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->