உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை கைப்பற்றியது ரஷ்ய படைகள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஏவுகணை மூலம் தாக்கி வருகிறது.

மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கிழக்கு மாகாணமான லூகன்ஸ் மாகாணத்தில் முக்கிய நகரங்களை ரஷ்யப்படைகள் கைப்பற்றிய நிலையில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லூகன்ஸ் மாகாணத்தை முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia captures Luhansk province of Ukraine


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->