காவலர் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி...! சோகத்தில் மூழ்கிய கிராமம்...! - காவலர்கள் தீவிர விசாரணை! பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மத்தூர் அருகேயுள்ள மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், கமலாபுரம் கூட்டுச்சாலை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறை மற்றும் ராணுவத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் தற்போது 26 மாணவர்கள் தங்கி தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் சாருகேஷ் (20), இன்று காலை சுமார் 8 மணியளவில் பயிற்சி மைய வளாகத்தில் இருந்த மின் மோட்டாரை இயக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சாருகேஷ் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால், மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்குமுன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த துயரச்சம்பவம் பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student preparing police exam died electrocution village plunged grief police investigating intensively What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->