என்ன கொடும டா... அதிகாரபூர்வ கணக்கை உறுதி செய்ய ரூ. 1600 வசூல்.!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது, சுமார் ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்குவதாக தெரிவித்தார். அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்ததனால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியாதாக கூறி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இந்தமாதம் 28 தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, ட்விட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த 27 ம் தேதி இறுதி செய்யப்பட்டது. இறுதியாக ட்விட்டர் நிறுவனத்தை 3.5 லட்சத்திற்கு வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் ட்விட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதில் ஒரு பகுதியாக ட்விட்டர் நிறுவனத்தில் பணி புரிந்த சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சிஎப்ஓ உள்ளிட்ட சில உயர் அதிகாரிகளை அதிரடியாக வேலையில் இருந்து நீக்கினார். 

தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் "ட்விட்டர் நிறுவனத்தில் அதிகாரபூர்வ கணக்கு என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக்கிற்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 1600 வசூல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rupees 1600 collection for conform twitter account


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->