பேராபத்து நிச்சயம்; 2027 வரை உக்கிர தாண்டவம் ஆடப்போகும் எல் நினோ; வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு, காட்டுத்தீ, வறட்சி ஏற்படும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பசிபிக் பெருங்கடலில் உருவாகிவரும் மிகக் கடுமையான 'சூப்பர்' எல் நினோ காலநிலை மாற்றம் குறித்து, காலநிலை நிபுணர் பில் மெக்குயர் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகப்பு எல் நினோ என அழைக்கப்படுகிறது. 

அதாவது, வழக்கமாக கடல் வெப்பநிலை 2°C வரை அதிகரித்தால் அதை 'சூப்பர் எல் நினோ' என்பார்கள். ஆனால், தற்போது உருவாகிவரும் எல் நினோ வெப்பநிலை 4°C வரை உயரும் அபாயம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உலகளாவிய காலநிலை மாற்றங்களையும் பேரழிவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், இதை 'ஹைப்பர் எல் நினோ' என்று குறிப்பிடுகிறார்கள்.

கடந்த 1997-98 ஆம் ஆண்டில் உலகளாவிய மற்றும் உள்ளூர் தாக்கங்கள் காரணமாக ஏற்பட்ட எல் நினோ உலகளவில் 5.7 டிரில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. தற்போதைய எல் நினோ அதைவிட மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதால்,என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் பருவமழை ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதேப்போன்று, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும், அமேசான் காடுகள், தெற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சியும் காட்டுத்தீயும் உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா மாநிலத்தில் 'வளிமண்டல ஆறுகள்' (Atmospheric rivers) மூலம் கொட்டித் தீர்க்கும் மழையால் 'ஏஆர்-கே-ஸ்டார்ம்' (ARkStorm) போன்ற பேரழிவு ஏற்பட்டு 1 டிரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பிரித்தானியாவில் சுழல் காற்றுகளும் கடும் வெள்ளப்பெருக்கும் உருவாகும் என்று எதிர்வு கூரப்பப்ட்டுள்ளது.

இந்த 'எல் நினோ'வின் தாக்கம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.6°C முதல் 1.7°C வரை உயரக்கூடும் என்றும், இது வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறும் அபாயம் உள்ளதாக  கூறப்படுகிறது. உலக நாடுகள் உடனடியாகக் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் பேராபத்து நிச்சயம் என ஆய்வாளர் பில் மெக்குயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Risk of unprecedented floods and droughts due to the intensifying El Nino impact lasting until 2027


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->