உக்ரைனில் இலக்குகளை அடைவோம் - ரஷ்ய வீரர்களின் தாய்மார்களிடம் புடின் உறுதி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள முக்கிய நகரங்களை உக்ரைன் படைகள் மீட்டுள்ளதால் கெர்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளன.

இதனால் ரஷ்ய படைகள் உக்ரைன் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது. மேலும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்யா வீரர்கள் மற்றும் போரில் உயிரிழந்தவர்களின் 17 பேரின் தாயாரை அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், ஒரு மகன், ஒரு குழந்தையின் இழப்பை எதுவும் ஈடுசெய்ய முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

நானும் தனிப்பட்ட முறையில் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த தலைமையும் இந்த வலியைப் பகிர்ந்து கொள்கிறோம். உக்ரைனில் நாம் நமது இலக்கை அடையவேண்டும் இறுதியில் நாம் இலக்கை அடைவோம்' என்றார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Putin assures mothers of Russian soldiers that we will achieve our goals in Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->