சொத்து மதிப்பு மோசடி: டிரம்ப்க்கு ரூ.3 ஆயிரம் கோடி அபராதம்!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் அதிபர் ரோனால்ட் ட்ரம்ப் மீது பாலியல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. தொழிலதிபரான மற்றும் வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்பை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை டொனால்ட் ட்ரம்ப் மறுத்தார். 

இந்நிலையில் நிதி மோசடி வழக்கில் நியூயார்க் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்புகளை உயர்த்தி காட்டியதற்கு டிரம்ப் அபராதமாக 364 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

மேலும் நியூயார்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அதிகாரி அல்லது இயக்குனராக பணியாற்ற ட்ரம்புக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் ட்ரம்பின் மகன்களுக்கு தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ட்ரம்பின் வழக்கறிஞர்கள், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Property value fraud Trump fined Rs 3 thousand crores


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->