உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முதன்மை...!-விலகும் நேரம் குறித்து ஜெலன்ஸ்கி தெளிவுரை
priority end war Ukraine Zelensky clarifies timing departure
2019-ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜெலன்ஸ்கியின் பதவிக்காலம் 2024 பிப்ரவரியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் ரஷியாவுடனான கடும் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர் இன்னும் அதிபர் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் உரையாற்றிய ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது,"என்னுடைய முதல் மற்றும் மிகப்பெரிய இலக்கு – ரஷியாவுடனான போரை முற்றுப்புள்ளி வைப்பது.
போர் முடிந்தவுடன் நான் அதிபர் பதவியை விட்டு விலகி விடுவேன். அதன் பிறகு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. அதிபர் ஆசனத்தைப் பிடித்திருப்பது எனக்கு குறிக்கோள் அல்ல; மக்களுடன் எப்போதும் துணையாக நிற்பதே என் நோக்கம்.
மேலும், போர் காலத்தில் உக்ரைன் மக்களுடன் தோள் கொடுத்து நிற்கும் வரை நான் இருப்பேன். ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட்டதும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பேன். அப்போது உக்ரைன் மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
priority end war Ukraine Zelensky clarifies timing departure