சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும்; அந்நாட்டு அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி..!
Prime Minister Modi spoke to the President of Sri Lanka over the phone and said that India will stand by him
டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பதிப்பட்டுள்ளது. புயல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால், 355க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதோடு, 370 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்க உடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்தாலும், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முன்னதாக புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்களையும், மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.

வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வுடன் பேசிய பிரதமர் மோடி, அந்நாட்டில் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளதோடு, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், 'ஆப்பரேஷன் சாகர் பந்து'வின் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத் தயார் என்று மோடி உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களையும், மீட்பு படையினரையும் அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க கூறியுள்ளார்.
English Summary
Prime Minister Modi spoke to the President of Sri Lanka over the phone and said that India will stand by him