அதிபர் வெற்றி… ஆனால் 700 மக்கள் சாவு...! தான்சானியாவில் ஜனநாயகத்தின் முகமூடி கிழிந்ததா...?
president wins but 700 people die Has mask democracy torn off Tanzania
கிழக்கு ஆப்பிரிக்க நாட்டான தான்சானியா, தற்போது கடுமையான அரசியல் அதிர்வில் சிக்கியுள்ளது.அந்நாட்டின் அதிபராக சாமியா சுலுஹு ஹாசன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது.கடந்த ஏப்ரல் மாதம், தான்சானியா தேர்தல் ஆணையம், “புதிய தேர்தல் சீர்திருத்த விதிகளை ஏற்காத கட்சிகள் இனி வாக்குப்போட்டியில் பங்கேற்க முடியாது” என கடுமையான உத்தரவை வெளியிட்டது.

ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான சடேமா (CHADEMA) தலைவர் டுண்டு லிசு, அந்த விதிமுறையில் கையெழுத்திட மறுத்தார். இதையடுத்து, அவர்மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, சடேமா கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது, இதுவே அந்த நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
அதிபர் சாமியா சுலுஹு ஹாசனின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அவர் மீண்டும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.ஆனால் இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. “அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது” என குற்றம் சாட்டிய சடேமா கட்சி, முடிவை நிராகரித்தது.
இதன் பின்னணியில் வன்முறை வெடித்தது.கடந்த மூன்று நாட்களில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.நிலையமைப்பு கட்டுக்குள் வராமல் போனதால், தான்சானியா அரசு நாட்டுமுழுவதும் இணையத்தை முடக்கி, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சர்வதேச சமூகமும் இந்நிலையை “கடுமையான மனித உரிமை பிரச்சினை” எனக் கண்டித்து, அமைதியை நிலைநிறுத்த அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.
English Summary
president wins but 700 people die Has mask democracy torn off Tanzania