நான் விளையாட ஆரம்பித்தால் சீனா அழிந்து போகும் - அதிபர் ட்ரம்ப் மிரட்டல்.!!
president trumph thread to china
அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினையை ஆற்றி வருகிறது.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:- "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.

நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோகும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்ததுடன், அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று தெரிவித்தார்.
English Summary
president trumph thread to china