'அமெரிக்காவின் எல்லா வளர்ச்சிக்கு காரணம் வரிகள்தான்'; அதிபர் டிரம்ப் சுய விளம்பரம்..!
President Trump says taxes are the reason for all of Americas growth
'அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான்' என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 02-வது முறையை பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அத்துடன், அவர் வரி விதிக்காத துறையே இல்லாத அளவுக்கு அனைத்திற்கும் வரி.. வரி..என வரியை வாரி விதித்துள்ளார்.
அத்தியாவசிய தேவையான மருந்து பொருட்கள் தொடங்கி களியாட்ட நிகழ்வான சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டியுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப, 'எனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும்' என வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 'அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள்' என்று டிரம்ப் தம்பட்டம் அடித்துள்ளார்.
English Summary
President Trump says taxes are the reason for all of Americas growth