பெல்ஜியம் || பயங்கரவாதி நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் போலீஸ் அதிகாரி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஐரோப்பா நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசில்சின் ஷர்க்பீக் பகுதியில் நேற்று இரவு 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கத்தியுடன் வந்த நபர் போலீசார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார். 

இந்த தாக்குதலில் ஒரு போலீசின் கழுத்தில் கத்தியால் குத்தியதில், அந்த போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். மற்றொரு போலீசார் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, அந்த போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த போலீசார் படுகாயமடைந்த 2 போலீசாரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான ஒரு போலீஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மேலும் இந்த தாக்குதல் நடத்திய நபரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியபோது கடவுளே சிறந்தவன் என்று அரேபிய மொழியில் தெரிவித்து, அந்த நபர் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் பயரவாத தாக்குதல் என்று பெல்ஜியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police officer killed in knife attack by terrorist in Belgium


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->