இயற்பியல் துறையில் சிறந்து வழங்கிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.!
Physics Nobel Price
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான 2020 இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் இயற்பியல், மருத்துவம், வேதியியல் மற்றும் பொருளாதாரம், அமைதி, இலக்கியம் போன்ற 6 துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன்படி, இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியதாக 3 பேருக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பேனரோஸ், ரெயின்ஹார்டு கேன்சல், அண்ட்ரெஸ் கேஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கருந்துளை எப்படி உருவானது என்பது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த அறிவியலாளர் ரோஜருக்கு இயற்பியல் நோபல் பரிசும், விண்மீன் திரளின் மையப்பகுதி தொடர்பான கண்டுபிடிப்பிற்காக ரெயின்ஹார்டு கேன்சல், அண்ட்ரெஸ் கேஸ் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil