கடும் நிதிச்சுமையால் விரக்தி; பெற்றோரை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சகோதரர்கள்; மஹாராஷ்டிராவில் சோகம்..!
In Maharashtra two brothers killed their parents and then committed suicide due to severe financial burden
மகாராஷ்டிராவில், நிதிச்சுமை காரணமாக பெற்றோரை கொலை செய்து, இரண்டு மகன்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், நாந்தேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சோனாஜி லாகே (51). இவரது மனைவி ராதாபாய் லாகே (45). இவர்களுக்கு உமேஷ் (25), பஜ்ரங் (23) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.இதில் 51 வயதான தந்தை ரமேஷ் சோனாஜி லாகே பக்கவாதம் நோயால் நீண்டநாள் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களது குடும்பத்தில் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதை உமேஷ்,பஜ்ரங் ஆகிய இரண்டு மகன்களால் சமாளிக்க முடியவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர்கள், தந்தை மற்றும் தாயை கொலை செய்துவிட்டு, தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி தந்தை மற்றும் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், வீட்டை விட்டு வெளியேறி இருவரும், அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்று ரெயில் முன் குதித்து தற்கொலை செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அத்துடன், இந்த நான்கு பேரின் மரணத்திற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா.? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
In Maharashtra two brothers killed their parents and then committed suicide due to severe financial burden