கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வரும் கிராமம்.! பகீர் பின்னணி.!  - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் கிராமம் ஒன்று வருடந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கி வருகின்றது.

புவி வெப்பமயமாதல் காரணமாக டன் கணக்கில் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இதன் காரணமாக சமீப காலமாகவே கடல் நீர் மட்டமானது அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் கிராமம் ஒவ்வொரு வருடமும் நான்கு சென்டிமீட்டர் சதவீதம் கடலுக்குள் மூழ்கி வருகின்றது.

இந்த கிராமமானது இதற்கு முன்பு தீவாக இருந்தது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பு வந்த காரணத்தால் நிலப்பரப்பு ஏதுமில்லாத மிதக்கும் வீடுகளாக மாறியிருக்கின்றது. இந்த கிராமத்தில் மின் வசதிகள் எதுவும் இல்லை. சோலார் சக்தியை பயன்படுத்தி அக்கம்பக்கத்தினர் உடன் மின் இணைப்பைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

கிராமத்தில் ஒரே ஒரு கிணறு தான் நீராதாரம். 2011ம் ஆண்டு வந்த புயலின் காரணமாக தேவாலயம், நீதிமன்றம், பள்ளி கூடம் ஆகியவை அழிந்துவிட்டது. இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள். எனவே வேறு எங்கும் போக முடியவில்லை. தங்களுடைய இருப்பிடங்களை மூங்கில்களால் உயர்த்தி நீரில் மூழ்காமல் பார்த்துக் கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PHILIPPIANS ISLAND


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->